மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்‍கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்‍கீட்டை எதிர்த்த வழக்‍குகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் அக்‍டோபர் 21-ம் தேதி முதல், இறுதி விசாரணை

Sep 17 2021 8:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்‍கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்‍கீடு தொடர்பான வழக்‍குகளில், வரும் அக்‍டோபர் 21-ம் தேதி முதல், இறுதி விசாரணை நடைபெறும் என​சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை ரத்து செய்யக்‍கோரி தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியதுபோல், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்‍கோரி, தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, அரசு தலைமை வழக்கறிஞர் கோரினார். இந்த சட்டத்தின் அடிப்படையில், கடந்த கல்வியாண்டில், 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அரசு பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00