கடல் அரிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் மீனவர்கள் : செயற்கை துறைமுகங்களால் அதிகரிக்கும் கடல் அரிப்பு - உடனடியாக தடுப்பு சுவர் அமைக்குமாறு மீனவர்கள் கோரிக்கை

Sep 17 2021 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவநிலை உள்ளிட்ட காரணங்கால் அதிகரித்து வரும் கடல் அரிப்பால் வீடுகளை இழந்தும், மின்சாரமின்றியும் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவர்கள் இரவு தூக்கத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் கடந்த சில வாரங்களாக கடலரிப்பு அதிகரித்துள்ளது. மரங்கள், மின்கம்பங்கள், மீன்பிடி உபகரணங்கள் பாதுகாக்கும் கொட்டகைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை துறைமுகங்கள் மற்றும் தூண்டில் வளைவு துறைமுகங்கள் அமைக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள், இதுகுறித்து கடந்த 3 மாதங்களாக அமைச்சர், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் குறைகளை தெரிவித்தும் எந்த பலனும் எடுக்‍கவில்லை என வேதனை தெரிவிக்‍கின்றனர். தங்கள் கிராமம் 200 மீட்டர் அளவிற்கு கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் உறங்க அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீனவ மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். இக்கட்டான நேரங்களில் கோயில் போன்ற பொது இடங்களில் சென்று குடும்பத்தோடு தங்கும் நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உடனடியாக தடுப்பு சுவர் அமைத்து தங்களை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00