"நான் கடவுள் இல்லை" டீசர் வெளியீடு : விஜய் பற்றி உண்மைக்கு மாறான செய்திகள் கவலை தருகிறது - பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்

Sep 17 2021 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊடகங்கள், தங்கள் வாசகர்கள் மற்றும் நேயர்களை அதிகரித்துக் கொள்வதற்காக, பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என நடிகர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான திரு.S.A. சந்திரசேகர் கேட்டுகொண்டுள்ளார்.

சமுத்திரக்கனி, சரவணன் உள்ளிட்டோர் நடித்து, திரு.S.A. சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு டீசர் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு.S.A. சந்திரசேகர், தனது மகன் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருவது குறித்து கவலை தெரிவித்தார். வெற்றியைக் குறிப்பிடும் வகையில், தனது மகனுக்கு விஜய் என, தான் பெயர் சூட்டியதாக நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டதை தயாரிப்பாளர் நாகிரெட்டி, தனது மகனுக்கு விஜய் என பெயர் சூட்டியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடுவதைத் தவிர்த்து, உண்மையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என திரு.S.A. சந்திசேகர் கேட்டுக் கொண்டார்.

நான் கடவுள் திரைப்பட டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி, நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00