காவல் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவன விளம்பரங்களை உடனடியாக நீக்‍க வேண்டும் - காவல்துறை தலைமை இயக்‍குநர் சைலேந்திரபாபு உத்தரவு

Sep 17 2021 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சில காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகையை வைக்க, தனியார் நிறுவனங்கள், தானாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர் பலகை வைக்கின்றன. இதனால் அந்த பெயர் பலகைகளில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு காவல் நிலையங்களின் பெயர் பலகைகளில் உள்ள தனியார் விளம்பரங்களை நீக்குமாறு, தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சில காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் பெயர்களால், மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது எனவும், தனியார் நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்றி புதிய பெயர் பலகைகளை வைக்க வேண்டும் எனவும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00