ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்‍களின் விலை கடும் உயர்வு - தோவாளை பூச்சந்தையில், பிச்சிப்பூ கிலோ ரூ.1,200-ஆக அதிகரிப்பு

Oct 13 2021 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்‍களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தோவாளை பூச்சந்தையில், பிச்சிப்பூ கிலோ ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தோவாளை பூச்சந்தை களைகட்டியுள்ளது. கேரளாவில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் ஏராளமான மக்கள், பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கிலோ 100 ரூபாய்க்கு விற்ற செவ்வந்திப்பூ 200 ரூபாயாகவும், வாடாமல்லி 200 ரூபாய்க்‍கும், ரோஜா 250 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மல்லிகைப்பூ 800 ரூபாய்க்‍கும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது.

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, தூத்துக்‍குடி பூச்சந்தையில், மல்லி, பிச்சி உள்ளிட்ட் பூக்‍களின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூவின் விலை கிலோ ஆயிரம் ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சில்லறை வியாபாரிகள் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்திப்பூ தற்போது 300 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 40 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கோவையில் ஆயுதபூஜை களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், மலர்களின் விலையேற்றத்தால் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00