டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் : திருச்சியில் அப்துல் கலாம் பயின்ற கல்லூரியில் மாணவர்கள் தினம் கொண்டாட்டம்

Oct 13 2021 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் அப்துல் கலாம் பயின்ற கல்லூரியில் மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின், 90-வது பிறந்தநாளான வரும் 15-ம் தேதி, சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், திருச்சியில் அப்துல் கலாம் படித்த புனித வளனார் கல்லூரியில், இன்று மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் உள் அரங்கில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலாமின், திருவுருவப் படத்திற்கு தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரி இயக்குனர் திரு.மினி ஷாஜிதாமஸ், கல்லூரி முதல்வர் திரு.ஆரோக்கியசாமி தாமஸ், மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள், மரம் வளர்ப்போம் - நாட்டுப்பற்றுடன் வாழ்வோம்- போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00