கூடுதல் கட்டணம் வசூலிக்‍கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்‍கை : அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை

Oct 13 2021 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்‍கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என போக்‍குவரத்துத் துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையால், பொதுமக்‍கள் வெளியூர்களுக்‍கு அதிக அளவில் செல்வார்கள். இதையொட்டி, இன்றுமுதல் வரும் 20-ம் தேதி வரை ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்த அனைத்து வட்டாரப் போக்‍குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்‍கு, போக்‍குவரத்துத் துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கவும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் உரிய வரி செலுத்ததாத ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்‍கும் ஆம்னி பேருந்துகள் குறித்து பொதுமக்‍கள், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00