தமிழகத்தில் ஒரேநாளில் ஆயிரத்து 280 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 19 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தகவல்

Oct 14 2021 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரத்து 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 289 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்பால் 18 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 842 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சூழலில், ஆயிரத்து 421 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

சென்னையில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 842 பேர், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 173 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

கோவையில் ஒரேநாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 594 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 148 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

செங்கல்பட்டில் 104 பேருக்கும், திருப்பூரில் 79 பேருக்கும், ஈரோட்டில் 78 பேருக்கும், திருவள்ளூரில் 65 பேருக்கும், தஞ்சையில் 58 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00