உழைப்புதான் உலகை இயக்கும் உன்னத சக்தி என்பதை நிரூபிக்கும் விதமாக உழைப்பவர்கள் அனைவரும் உயர்ந்திட வேண்டும் - ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து

Oct 14 2021 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
தீயசக்திகளை எந்நாளும் உறுதியோடு எதிர்த்து நின்று, நேர்மறை சிந்தனைகளோடும், நம்பிக்கையோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் எண்ணத்தோடு, அனைவரும் வளமும் நலமும் பெற்று, ஆனந்தமாக வாழ்ந்திட, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெயியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்பின் சிறப்பையும், தொழிலின் மேன்மையையும் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தாயாய் உலகைக் காத்திடும் அன்னை பராசக்தியை, நாம் வீரத்தோடு விளங்கிட துர்க்கை வடிவில் மூன்று நாட்களும், செல்வம் பெருகிட லட்சுமி வடிவில் மூன்று நாட்களும், கல்வியிலும் கலைகளிலும் சிறந்திட சரஸ்வதி வடிவில் மூன்று நாட்களும் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும் - இதன் நிறைவில் அவரவருக்கு வாழ்வளிக்கிற தொழிலைப் போற்றி வணங்கிடும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது - இதைப் போன்றே விஜயதசமி அன்று தொடங்கும் நற்செயல்கள் வெற்றிமுகமாகும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில் அனைத்து தொழில் செய்பவர்களும் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்து, "இனி எல்லாம் நலமே" என்கிற அளவிற்கு நன்மைகளைப் பெற்றிட வாழ்த்துவதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். "உழைப்புதான் இந்த உலகை இயக்குகிற உன்னத சக்தி" என்பதை நிரூபிக்கும் விதமாக உழைப்பவர்கள் அனைவரும் உயர்ந்திட வேண்டுமென அன்னை பராசக்தியை வேண்டுவதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தீயசக்திகளை எந்நாளும் உறுதியோடு எதிர்த்து நின்று, நேர்மறை சிந்தனைகளோடும், நம்பிக்கையோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் எண்ணத்தோடு, அனைவரும் வளமும் நலமும் பெற்று, ஆனந்தமாக வாழ்ந்திட வாழ்த்துவதாக, திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00