ஆயுத பூஜை, விஜயதசமியை தொடர் விடுமுறையை யொட்டி, வரும் சனிக்‍கிழமை அனைத்து பள்ளிகளுக்‍கும் விடுமுறை - பள்ளிக்‍கல்வித்துறை அறிவிப்பு

Oct 14 2021 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், வரும் சனிக்‍கிழமை, அனைத்து பள்ளிகளுக்‍கும் விடுமுறை அளிக்‍கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், பொறியியல் மற்றும் பாலிடெக்‍னிக்‍ கல்லூரிகளுக்‍கும், வரும் சனிக்‍கிழமை விடுமுறை அளிக்‍கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்‍கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதிமுதல், பள்ளிகள் திறக்‍கப்பட்டன. பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படுவதால், மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்‍கு வருகை தருவதாகவும், ஆசிரியர்கள் பலர், தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து, தொலைதூரத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இன்று மற்றும் நாளை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறையாக அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாளான வரும் சனிக்‍கிழமை 16-ம் தேதியும், விடுமுறை அளிக்‍க வேண்டுமென கோரிக்‍கை விடுத்திருந்தன. இந்நிலையில், கோரிக்‍கைகளை ஏற்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, வரும் 16-ம் தேதி சனிக்‍கிழமை, பள்ளிகளுக்‍கு விடுமுறை வழங்கப்படுவதாக, தமிழக பள்ளிக்‍கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00