தமிழகத்தில் டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்‍கள் அதிர்ச்சி - பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து 102 ரூபாயை கடந்தது

Oct 14 2021 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டியுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக வரலாற்றில் முதன்முறையாக, கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் வரி காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. ஒரு சில மாநிலங்களில், பெட்ரோல் விலை 110 ரூபாயையும் கடந்துள்ளது. பெட்ரோல் விலையில், 50 ரூபாய்க்கும் மேல், வரியாகவே செல்கிறது. தமிழக அரசு பெட்ரோல் விலை மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பெட்ரோல் விலை 98 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. இருப்பினும், சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டு வந்த விலை அக்டோபர் மாத தொடக்கத்தில் 99 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனையானது. இதன் பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த பெட்ரோல் விலை, இன்று சென்னையில் 102 ரூபாயை கடந்துள்ளது. கடந்த 13 நாட்களில், பெட்ரோல் விலை 2 ரூபாய் 52 காசுகள் உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00