பட்டாசு விபத்தில் காயமடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை

Oct 27 2021 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்‍குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சாலையையொட்டி இருந்த, ஒரு மளிகை கடையில் வைத்து பட்டாசு விற்பனை நடந்துள்ளது. அங்கு நேற்று இரவு பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அவ்வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறியதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் இருந்த பேக்கரி கடை சிலிண்டர்கள் வெடித்ததால் கட்டடங்கள் இடிந்துள்ளன. இந்த இடிபாடுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் , தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00