தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேலைகளில் ஈடுபடும் ஆலை நிர்வாகம் : மாவட்ட நிர்வாகம் தலையிட ஆலை எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தல்

Oct 27 2021 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேலைகளில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக அரசால் இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் ஆலை நிர்வாகம், சிலரை தூண்டிவிட்டு ஆலையை திறக்க வைக்கும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆலை எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் இந்த ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் உறுதியான தீர்ப்பு அளித்த பின்னரும், ஆலை நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தலையிட்டு இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாவிட்டால், ஆலைக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும் என ஆலை எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00