தன்னிச்சையாக போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் அறிவித்ததாக குற்றச்சாட்டு

Oct 27 2021 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
தன்னிச்சையாக போனஸ் அறிவித்த தமிழக அரசைக்‍ கண்டித்து, திருச்சியில் ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல், அரசு ஊழியா்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு ஏஐடியூசி சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து முடிவெடுக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ள தமிழக அரசைக்‍ கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் ஏஐடியூசி போக்குவரத்துத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருச்சி மண்டல போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்று போனஸ் அறிவிக்காவிட்டால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசுக்‍கு தொழிலாளர்கள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00