ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை தள்ளுவண்டியை இழுத்தபடி நடைபயணம் : பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தல்

Oct 27 2021 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியோடு தள்ளு வண்டியை இழுத்தபடி, இராணுவ வீரர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பாலமுருகன் என்பவர், கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 16 ம் தேதி முதல் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். பாம்பன் பாலத்திலிருந்து அயோத்தி வரை சுமார் 2 ஆயிரத்தி 800 கிலோமீட்டர் தூரத்திற்கு 197 நாடுகளை சேர்ந்த தேசிய கொடியை எந்தியபடி தள்ளுவண்டியை இழுத்தபடி அவர் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். மதுரையலுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்தடைந்த அவருக்‍கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். விழிப்புணர்வு வண்டியில் கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊசிகளையும், முகக்கவசங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

கொரானாவிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காத்துக்கொள்வது குறித்து இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்வதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00