முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் குருபூஜை - வரும் 29ம் தேதி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் புரட்சித்தாய் சின்னம்மா

Oct 27 2021 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தாய் சின்னம்மா, தஞ்சாவூரில் இருந்து நாளை பிற்பகல் புறப்பட்டு திருச்சி வழியாக மதுரை செல்கிறார். நாளை மறுநாள், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், புரட்சித்தாய் சின்னம்மா, நாளை, மதியம் 1.00 மணிக்‍கு, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக மதுரை செல்கிறார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மதுரையில் வரும் 29-ம் தேதி, காலை 8 மணிக்‍கு கோரிபாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்‍கு, புரட்சித்தாய் சின்னம்மா, மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பின்னர், அருள்மிகு மாரியம்மன் கோவில் தெப்பக்‍குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்‍கு, புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா அங்கிருந்து புறப்பட்டு, மானாமதுரை வழியாக தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று, அங்கு அமைந்துள்ள தேவர் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதன் பின்னர், புரட்சித்தாய் சின்னம்மா, பசும்பொன்னிலிருந்து புறப்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்‍கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்றடைகிறார் என அந்த செய்திக்‍குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00