விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்‍கட்டு உடைந்ததால் வீணாகும் தண்ணீர் - மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்‍கள் அச்சம்

Nov 24 2021 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வீணாவதால், பொதுமக்‍கள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணிர் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் எல்லீஸ் அணைக்‍கட்டில் சேமிக்‍கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்‍கு முன்பு அணைகட்டின் உட்புற சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்தது. அணைகட்டின் 7 மதகுகளில் 3 மதகுகள் முழுமையாக உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. பாசனத்திற்கும், குடிநீர் தேவையையும் பூர்த்திசெய்து வந்த இந்த அணைகட்டின் மதகுகள் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் விவசாயிகளும், பொதுமக்‍களும் கவலை அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் உரிய முறையில் பராமரிக்‍காததே அணைக்‍கட்டு உடைப்பு ஏற்படக்‍ காரணம் என குற்றம் சாட்டிய அவர்கள், அணைக்கட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00