தமிழகத்தில் சற்றே குறையத் தொடங்கிய தக்‍காளி விலை - சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 30 ரூபாய் வரை குறைந்தது : சில்லறை விற்பனையில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைந்தது

Nov 25 2021 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தக்‍காளியின் விலை குறைய தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்‍காளி 30 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு கிலோ தக்‍காளி 150 ரூபாய் வரை உயர்ந்ததால், பொதுமக்‍கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தக்‍காளி வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, தமிழகத்தில் தக்‍காளி விலை குறைய தொடங்கியுள்ளது. சென்னையில் மொத்த விற்பனை சந்தைகளில் ஒரு கிலோ தக்‍காளி 30 ரூபாயும், சில்லரை விற்பனையில், 10 ரூபாய் முதல் 20 ரூபாயும் குறைந்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக நாட்டு தக்‍காளி ஒரு கிலோ, 110 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக குறைந்துள்ளது. இரண்டாம் ரக நாட்டு தக்‍காளி ஒரு கிலோ, 100 ரூபாயிலிருந்து 70 ரூபாயாக குறைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00