ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ.வின் அடுக்குமாடி குடியிருப்பில் கொலை : அரசு மருத்துவமனை செவிலியர் வெட்டி படுகொலை

Nov 25 2021 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வந்த அரசு மருத்துவமனை செவிலியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியராக பணிபுரிந்து வந்த செல்வி என்பவர், ஆண்டிபட்டியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். செல்வியின் கணவர் சுரேஷ் மற்றும் குழந்தைகள் திண்டுக்கல்லில் வசித்து வந்தனர். நேற்றிரவு மனைவி செல்விக்கு சுரேஷ் தொடர்ந்து போன் செய்த போதும், அவர் பதிலளிக்காததால், உறவினர்களுக்கு தகவல் அளித்து, வீட்டில் சென்று பார்க்கச் சொன்னார். இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த செல்வியின் வீட்டுக் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீசார், செவிலியர் செல்வியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00