மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு : மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் - மத்தியக் குழு தகவல்

Nov 25 2021 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்போவதாக, மத்தியக்‍ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணைச் செயலாளர் திரு. ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு கடந்த 21-ம் தேதி சென்னை வந்தது. மத்தியக்‍ குழுவினர் இரண்டு குழுக்‍களாகப் பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து, மழை,வெள்ளம் சேத விவரங்கள் குறித்தும் விவசாயிகள், பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். அதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை மத்திய குழுவினர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு தற்காலிக நிவாரண உதவியாக ஆயிரத்து 70 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக 3 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் ஒதுக்‍கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே கோரப்பட்ட நிதியையும் சேர்த்து, மொத்தம் 4 ஆயிரத்து 626 கோடி ரூபாயை ஒதுக்‍கீடு செய்ய தமிழக அரசு கோரிக்‍கை விடுத்துள்ளது. ஆலோசனைக்‍ கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக்‍ குழுவினர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்‍கப்படும் என தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00