சென்னை கோயம்பேடு சந்தையில் தக்‍காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்‍காளியை 40 ரூபாய்க்‍கு விற்பனை செய்யத்தயார் - உயர்நீதிமன்றத்தில், வியாபாரிகள் சங்கம் முறையீடு

Nov 25 2021 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்‍காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்‍காளியை 40 ரூபாய்க்‍கு விற்பனை செய்யத்தயார் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தக்‍காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையிட்டுள்ளது.

தமிழகத்தில் தக்‍காளி விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு, தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தையில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளதாகவும், இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை என்றும், இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட 11 லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது என்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை - இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகளை கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும் - இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும் - கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ தங்கள் சங்கம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்த வழக்‍கை உடனடியாக விசாரிக்‍க வேண்டும் என்றும் தக்‍காளி மொத்த வியாபாரிகள் சங்கம் கேட்டுக்‍கொண்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00