முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - பாதிக்‍கப்பட்ட பெண் எஸ்.பி. டிசம்பர். 1-ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

Nov 25 2021 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்‍கில், விழுப்புரம் நீதிமன்றத்தில், பாதிக்‍கப்பட்ட பெண் எஸ்.பி. வரும் 1-ம் தேதி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் எஸ்.பி.க்‍கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்‍கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பின் 4-வது சாட்சியான பெண் எஸ்.பியின் கார் ஓட்டுநராக இருந்த பாலமுருகன், 5-வது சாட்சியான பெண் எஸ்.பியின் பாதுகாவலராக இருந்த சந்திரசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி, சுமார் 3 மணி நேரம் சாட்சியம் அளித்தனர். இதனை நீதிபதி திரு.கோபிநாதன் பதிவு செய்தார். வழக்கு விசாரணையின்போது ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை.

இதனைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்த பெண் எஸ்.பியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என ராஜேஷ்தாஸ் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று, வரும் டிசம்பர் 1-ம் தேதி, பெண் எஸ்.பி நேரில் ஆஜராகவும், அன்றைய தினம் பெண் எஸ்.பியிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு நீதிபதி திரு.கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00