நெல்லை மாவட்டம் திசையின்விளை பகுதியில் தொடர் மழை : மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Nov 25 2021 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் திசையின்விளை பகுதியில் தொடர் மழையால் சாலைகள் வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கின்றன.

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. திசையன்விளை பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. பிரதான சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மழை நீரை வெளியேற்ற திசையன்விளை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 90 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலியில் 64 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 53 மில்லி மீட்டரும், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தலா 43 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00