முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : சட்டத்துக்கு எதிராக செயல்படும் கேரள அமைப்புகளை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது - 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டு

Dec 1 2021 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராக செயல்படும் கேரள அமைப்புகளை, தமிழக அரசு தடுக்‍க தவறிவிட்டதாக 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக, முல்லைபெரியாறு அணை 142 அடி எட்டியதால் 5 மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் திரு. S.R.தேவர் தலைமையில், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள அணைகட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினர். மேலும், கேரளா நோக்கி வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து தேனி வழியாக சென்றவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.S.R. தேவர். அணையை தகர்க்‍க சர்வதேச நாடுகளில் நிதி திரட்டும் ரசூல் ஜோயின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தவில்லை என குற்றம் சாட்டினர். கேரளாவில் நடைபெற உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான பேரணியை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 5 மாவட்ட விவசாய சங்கம் சார்பாக வைகை அணையில் இருந்து தமிழக கேரள எல்லையை நோக்கி, வரும் 5-ம் தேதி இருசக்கர பேரணி நடத்தப்படும் என அவர் எச்சரிக்‍கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00