மதுரையில் கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கிராமங்கள் : வீடுகளுக்குள் தண்ணீர் - வெள்ள நீரை அகற்றி நிரந்தர தீர்வு காண மக்கள் கோரிக்கை

Dec 1 2021 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் பெய்துவரும் மழையால் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் வெள்ளக்‍காடாய் காட்சியளிக்‍கின்றன. வீடுகளுக்‍குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் இரவில் உறங்க முடியாமல் பொதுமக்‍கள் தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மேலூர் தொகுதி மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கைலம்பட்டி கிராமத்தில் ஒடுங்கான் குளம் கண்மாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. கம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி, புங்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுத்துப்பட்டி, கீழவளவு ஊராட்சிக்குட்பட்ட வாட்சான்பட்டி, வஞ்சி நகரம் ஊராட்சிக்குட்பட்ட நெல்லுகுண்டுபட்டி, உள்பட பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. பத்துக்கு மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் இரவு முழுவதிலும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருக்க வேண்டிய நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் வெள்ள நீர் பாய்ந்ததால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளந. வெள்ள நீரை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00