மயிலாடுதுறையில், மழையால் நெல்மூட்டைகள் சேதமடைந்த அரசு நேரடி நெல் சேமிப்பு கிடங்கு மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Dec 2 2021 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறையில், மழையால் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் பாதிக்கப்பட்ட அரசு நேரடி நெல் சேமிப்பு கிடங்கை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, அங்கு உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரவைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டீ மணல்மேட்டில் கன மழையால் அங்கு உள்ள அரசு நெல் சேமிப்புக் கிடங்கை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகி வருவது குறித்து நேற்று முந்தினம் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா, டி.மணல்மேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயா டிவியில் செய்தி கிடைத்தவுடன் தண்ணீரை வடியவைப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மற்றும் மின் மோட்டார் உதவியுடன் தண்ணீரை வடிய வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இனி இந்த அரசு நேரடி நெல் சேமிப்பு கிடங்கு இந்த பகுதியில் இயங்காது என்றும், அதனை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இங்கு உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் எருக்கூர் பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்று அரவைக்கு பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00