கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது : அ.ம.மு.க.பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

Dec 2 2021 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்புக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக செயல்படும் மின்வாரிய ஊழியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரு நல்ல அரசு நிர்வாகத்தின் பணியாக இருக்க முடியும் என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். அதை விட்டுவிட்டு, ஊசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஊதியம் வழங்க முடியாது என்பது சர்வாதிகாரபோக்காகும் என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளளர். இந்தத் தவறை மின்வாரிய நிர்வாகம் உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00