சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக, அதனை சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? - தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Dec 2 2021 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக, அதனை சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? என தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்‍கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள கல்லூத்து என்ற கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தபோது, சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், கஞ்சா சட்டவிரோதமாக விற்கப்படுவதால், அதனை தடுக்க சட்டரீதியாக கஞ்சாவை விற்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்யவும், வரும் 20ம் தேதி அதற்கான அறிக்‍கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00