தி.மு.க. எம்.எல்.ஏ. தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் : ஊராட்சி மன்ற தலைவர்கள் நூதன முறையில் போராட்டம்

Jan 13 2022 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏவை கண்டித்து, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பிளீச்சிங் பவுடர் தூவியும், கபசுர குடிநீர் வழங்கியும், ஊராட்சி மன்ற தலைவர்கள், நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எந்தவித அதிகாரமும் வழங்காமல், நிதி ஒதுக்கீடு, நலத்திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தன்னிச்சையாக செய்வதாகவும், அவருக்கு ஆதரவாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து, காட்டு பையூர், வில்லிவளம், விளந்தை, சோழபாண்டியபுரம், எல்ராம்பட்டு, திருப்பாலப்பந்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிளீச்சிங் பவுடரை தூவியும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00