பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலிருந்து ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்

Jan 13 2022 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் தலைமறைவானார். 20 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், கடந்த 5ஆம் தேதி, கர்நாடக மாநிலம் ஹசன் நகரில், ராஜேந்திர பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர்.

15 நாள் நீதிமன்ற காவலில், மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால், திருச்சி மத்திய சிறையில் கடந்த 6ஆம் தேதி அடைக்கப்பட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு 4 வார காலத்திற்கு, இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையிலிருந்து, ராஜேந்திர பாலாஜி, ஜாமீனில் இன்று காலை வெளியே வந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00