பொது இடங்களில் முகக்‍கவசம் அணியாதோரிடம் வசூலிக்‍கப்படும் அபராதத் தொகை 500 ரூபாயாக உயர்வு - தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை

Jan 13 2022 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொது இடங்களில் முகக்‍கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்‍கப்பட்டு வந்த அபராதத் தொகையை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 934 பேருக்‍கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் முகக்‍கவசம் அணிவது கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது அபராதம் வசூலிக்‍கப்பட்டு வருகிறது. முகக்‍கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்‍கப்பட்ட நிலையில், இந்த அபராதத் தொகையை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரோம்பேட்டை, பல்லாவரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், வடசென்னை பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று காலை முதலே கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00