திருப்பூர் மாவட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகியை போலீசார் கைது

Jan 13 2022 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில், பா.ஜ.க இளைஞரணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

அண்மையில் பஞ்சாப் சென்ற பிரதமர் திரு.மோடி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் பல இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே, பா.ஜ.க சார்பில் மனிதசங்கலி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி வைத்து பழங்கள் விற்பனை செய்து வரும், முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க முற்பட்டனர். அச்சமடைந்த வியாபாரி அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடியுள்ளார். இருப்பினும் கடைக்குள் புகுந்தும் முத்துச்சாமியை சரமாரியாக தாக்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி மற்றும் பா.ஜ.வினர் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வியாபாரியை தாக்கிய பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00