பாம்பன் பாலத்தை கடந்து சென்ற ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் - பொதுமக்‍கள், சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

Jan 13 2022 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தை, ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் அடுத்தடுத்து கடந்து சென்றதை, பொதுமக்‍கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மண்டபம் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் கடல் மீது அமைந்துள்ள பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில், பெரிய கப்பல்கள் செல்வதற்காக ரயில் பாலத்தின் நடுவே திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நாகையைச் சேர்ந்த 20க்‍கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள், பாம்பன் பாலத்தை கடப்பதற்காக நிறுத்தி வைக்‍கப்பட்டிருந்தன. இந்நிலையில், பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு, தெற்கு கடல் பகுதியில் காத்திருந்த நாகையைச் சேர்ந்த 26 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள், பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. இதனை, பாம்பன் சாலை பாலத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் வீடியோ எடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00