சென்னை மடிப்பாக்கத்தில் பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவேற்றாதது குறித்த அவமதிப்பு வழக்கு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

Jan 13 2022 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மடிப்பாக்‍கம் பகுதியில், நீதிமன்ற உத்தரவுபடி பாதாள சாக்‍கடை பணிகள் நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவதிப்பு வழக்‍கில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர், கடந்த 2019ம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில் அளிக்‍கப்பட்ட பதிலை ஏற்ற நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி இப்பணிகள் முடிக்கப்படவில்லை என அய்யம்பெருமாள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் மடிப்பாக்கத்தில் பணிகள் ஏதும் துவங்கப்படாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் கூட கேட்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். எனவே, நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உறுதியாவதாக தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்‍கு தள்ளி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00