பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி வழக்‍கு - நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Jan 13 2022 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில், சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை, நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14-ம் தேதி முதல் 17ம் தேதி வரை, ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் ஜம்பை கிராமத்தில், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி பகுதி காவல்துறைக்‍கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது சேவல் சண்டை நடத்த அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பவானி பகுதி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00