பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் குறித்து புகார் அளித்தவர் மீது மிரட்டி வழக்‍குப்பதிவு - மன உளைச்சலால் இளைஞர் தீக்‍குளித்து இறந்த சம்பவத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Jan 13 2022 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் தொகுப்பு எனக்‍கூறி தரமற்ற பொருட்களை வழங்கி மக்‍களை தி.மு.க அரசு ஏமாற்றுவதாகவும், இதுகுறித்த புகார் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் தீக்‍குளித்து இறந்தது வேதனை அளிப்பதாகவும், தே.மு.தி.க பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரவண பொய்கை திருக்குளம் பகுதியை சேர்ந்த சமையல் கலைஞரான நந்தனுக்‍கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில், புளியில் இறந்து கிடந்த பல்லி குறித்து புகார் அளித்தார். இதற்காக அவர் மீது மிரட்டி வழக்‍குப்பதிவு செய்ததால் மன உளைச்சலுக்‍கு ஆளான நந்தனின் மூத்த மகன் குப்புசாமி, பெட்ரோல் ஊற்றி தீக்‍குளித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பாதிக்‍கப்பட்ட குடும்பத்தினரை தே.மு.தி.க. பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீசார் மிரட்டி வழக்‍குப்பதிவு செய்த அச்சத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00