தமிழகத்தில் அதிகரிக்‍கும் தினசரி கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 21 ஆயிரத்தை நெருங்குகிறது - சென்னையில் 8 ஆயிரத்தை தாண்டிய தொற்று

Jan 13 2022 7:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 911 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 911 பேருக்‍கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் கொரோனாவுக்‍கு உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 218 பேர் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 30 பேரும், கோவையில் ஆயிரத்து 162 பேரும், திருவள்ளூரில் 901 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்‍ரான் தொற்றுக்‍கு இதுவரை 231 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று பொதுமக்‍களை கட்டாயப்படுத்தி கொரோனா ஆர்.டி.​பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கட்டாய பரிசோதனையும் ஒரு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00