கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் கடற்கரை கிராமங்களை இணைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு - கிராம மக்‍களிடம் கருத்து கேட்காமல் அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு

Jan 21 2022 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் கடற்கரை கிராமங்களை இணைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராம மக்‍களிடம் கருத்து கேட்காமல் அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அருட்பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் ஏழுதேசம் பேரூராட்சியை இணைந்து அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த நிலையில் இந்த பேரூராட்சிகுட்பட்ட வள்ளவிளை ,மார்த்தாண்டம் துறை , நிரோடி, சின்னத்துறை, புத்தன் துறை, தூத்தூர் போன்ற கடற்கரை கிராமங்களை இணைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சிக்குரிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பேரூராட்சியை நகராட்சி யாக மாற்றியதற்கும், தொடர்ந்து வரி உள்ளிட்ட அனைத்தும் உயரும் எனவும் மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். அரசு தரப்பில் மீனவ மக்களிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை என்று கூறினர். தூத்தூர் பகுதியில் அருட்பணியாளர் பெபின்சன் தலைமையில் நடைபெற்ற மீனவ பிரதிநிதிகள் அவசர ஆலோசனை கூட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00