தமிழகத்தில் அதிகரிக்‍கும் கொரோனா பரவல் - வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்‍கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

Jan 21 2022 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி, வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கடைபிடிக்கப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் இந்த வாரமும் தொடரும் எனவும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00