ஈரோடு: சத்தியமங்கலம் மலர்ச் சந்தையில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு

Jan 21 2022 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
விளைச்சல் பாதிப்பு, முகூர்த்த கால தொடக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தியமங்கலம் மலர்ச் சந்தையில், பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் பனிப்பொழிவு காரணமாக, இங்கு பெருமளவு சாகுபடி செய்யப்படும் மல்லிகை மற்றும் முல்லைப் பூக்களின் விளைச்சல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இதனையடுத்து, சத்தியமங்கலம் பூ சந்தையில், பூக்களின் வரத்து குறைந்து காணப்படுவதால், நேற்று அதிக பட்சமாக 2 ஆயிரத்து 345 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, இன்று 900 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 202 ரூபாய்க்கு விற்பனையானது.

தற்பொழுது முகூர்த்த காலம் தொடங்கி உள்ளதால், அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு முறையே, முல்லைப் பூ ஆயிரத்து 740 ரூபாய், காக்கடா ஆயிரத்து 100 ரூபாய், கனகாம்பரம் 550 ரூபாய், ஜாதிமல்லி ஆயிரம் ரூபாய், செண்டுமல்லி 41 ரூபாய், சம்பங்கி 25 ரூபாய்க்கும் விற்பனையானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00