சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 12-ம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை - சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
May 13 2022 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 12ஆம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகாசன்-கௌரி தம்பதியினரின் 3ஆவது மகள், அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி, பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், கதவை தாழிட்டுவிட்டு, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேஸ் விநியோகிப்பாளர் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய மாணவியை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளதால், அவரது பாட புத்தகங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.