வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை - பழவேற்காடு மீனவர்கள் நடத்தும் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

May 26 2022 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணி கோரிக்‍கையை முன்வைத்து திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி மீனவர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழவேற்காடு அடுத்த காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளம் மற்றும் அதானி துறைமுகங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்டன. இந்த துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம், கடலோரத்தில் அமைவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக்‍கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த நிறுவனங்களில் ஆயிரத்து 750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்‍குறுதி அளிக்‍கப்பட்டு, 250 தொழிலாளர்களுக்‍கு மட்டும் வேலை அளிக்‍கப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏற்கனவே அறிவித்தபடி அனைவருக்‍கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழவேற்காட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக் கொடிகளை கட்டி, முகத்துவாரம் வழியாக கடலில் சென்று, எல்என்டி கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00