தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழை : வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்‍கள் மகிழ்ச்சி

May 26 2022 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று பிற்பகலில் திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. வானம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

புதுக்‍கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. விராலிமலை, காமராஜர் நகர், மதயானைப்பட்டி, பேராம்பூர், ஆம்பூர்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்‍கம் குறைந்துள்ளதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்‍க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00