நெல்லை பாளையங்கோட்டையில் கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகி படுகொலை : சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

May 28 2022 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை பாளையங்கோட்டையில், அமமுக நிர்வாகியை, மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துகுடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், பாளையங்கோட்டையில் கார் உதிரி பாக விற்பனை கடையை நடத்தி வந்ததுடன், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியான இவர், பாளையங்கோட்டையில் தொழில் செய்வதையொட்டி, குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

நேற்றிரவு, பணி முடிந்து வழக்கம்போல் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த அவரை, மர்ம கும்பல், பின்தொடர்ந்து வந்தது. குடியிருப்பு வளாகத்தை அடைந்த அவர், வீட்டிற்குள் நடந்து சென்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு, அந்த கும்பல் தப்பியோடி விட்டது. இதில், சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் போலீசார், பாளையங்கோட்டை, குலவணிகர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00