தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.ம.மு.க தொண்டர் வே.சுப்பிரமணி படுகொலைக்‍கு, பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் - படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தல்

May 28 2022 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.ம.மு.க தொண்டர் திரு.வே.சுப்பிரமணி படுகொலைக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைதுசெய்து, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு திரு.வே.சுப்பிரமணி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

திரு.வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகம் முழுவதும் படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சமூக விரோதிகள் சுதந்திரமாக சுற்றித் திரியக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது - காவல்துறையும், அதனை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் இப்போதாவது விழித்துக்கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாகிவிடும் என திரு.டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00