பன்னீர்செல்வம், பழனிசாமி முன்னிலையில் எதிர், எதிர் கோஷங்களால் பொதுக்‍குழு அரங்கில் கூச்சல் - குழப்பம் - பதற்றமான சூழ்நிலையில் நடைபெற்றது கூட்டம்

Jun 23 2022 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுக பொதுக்‍குழுவில் பங்கேற்க வந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே, அவரவர் தரப்பினர் எதிரெதிர் கோஷங்கள் எழுப்பினர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது.

அதிமுக பொதுக்‍குழு நடைபெறும் வானகரத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் வந்து சேர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி காலதாமதத்துடன் கூட்டத்திற்கு வந்தார். இதனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறாமல் மிகுந்த காலதாமதமானது. பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் மேடையில் அமர்ந்தபோது, ஒருவரையொருவர் பார்த்துக்‍கொள்ளவில்லை. இருதரப்பினரும் எதிரெதிர் கோஷங்கள் எழுப்பியதால், கூட்ட அரங்கிற்குள் பெரும் குழப்பம் நிலவியது.

ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்‍கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர, புதிதாக எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்‍கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் கூச்சலுக்‍கு மத்தியில் ஆவேசமாக அறிவித்தனர். இதன்பின்னர், கூட்ட அரங்கிற்குள் கூச்சல் குழப்பம் மேலும் அதிகரித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00