தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை உயர்த்தியது மத்திய அரசு - தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நிலை

Jul 1 2022 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தங்கம் இறக்குமதி கடந்த மே மாதம் 107 டன்னாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் தங்கம் இறக்‍குமதி அதிகரித்துள்ளது. இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீது அழுத்தம் அதிகரிப்பதாகவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீதான அழுத்தத்தை குறைக்‍கவும், தங்கம் மீதான இறக்‍குமதி வரியை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு 7 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 12 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் செஸ் வரி 2 புள்ளி 5 சதவீதம் சேர்த்து 15 சதவீதமாக அதிகரிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00