தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி மூலம் ரூ.1,500 கோடி லாபம் அதிகரிப்பு : தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தகவல்

Jul 1 2022 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்று, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட நாளும் முக்கியமான தினம் என தமிழக ஆளுனர் திரு. ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தின விழா, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, சிறப்பாக பங்களிப்பு செய்த நிறுவனங்களுக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இந்த நாள் நமது நாட்டின் மிக முக்கியமான ஒரு நாள் என்றும், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்று, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட நாளும் முக்கியமான தினம் இருப்பதாக தெரிவித்தார். ஜி.எஸ்.டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்பதன் வாயிலாக ஒன்று இணைகிறது என அவர் கூறினார். ஜி.எஸ்.டி மக்களுக்கு, வியாபாரிகளுக்கு எளிமையாக்கி உள்ளது என்றும், தமிழ்நாட்டில் கடந்த 4 வருடத்தில் ஜி.எஸ்.டி மூலம் 35 கோடி முதல் 1500 கோடி வரை லாபம் அதிகரித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00