பெரம்பலூர் அருகே 15 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Jul 1 2022 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் அருகே 15 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் காதலித்து உள்ளார். சிறுமிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில் சுரேஷ்குமாருடன் சிறுமி தலைமறைவானார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமான சிறுமி, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். தகவலறிந்து சென்று விசாரித்த பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்‍கு பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்த சுரேஷ்குமார் அவரது பெற்றோர் நாராயணசாமி, சிவக்கொழுந்து உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00