உசிலம்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்குவாதம்

Jul 1 2022 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை உசிலம்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ முன்பே அதிமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி நகராட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த சகுந்தலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்டார். இந்நிலையில், உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை துவங்குவது, பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாக கடைகள் கட்டுவது உள்ளிட்ட 29 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் 8-வது வார்டு கவுன்சிலரும், அதிமுக நகர செயலாளருமான பூமா கே.ஆர்.ராஜா என்பவர் அருகில் உள்ள 7 வது வார்டு மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முறைகேடாக குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கி வருவதாக குற்றம் சாட்டி 7 வது வார்டு அதிமுக கவுன்சிலர் கலாவதியுடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அதிகாரிகள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00